Wednesday, August 15, 2012

அறிவு என்றால் என்ன?


என் அண்ணன் ஒருவர் இன்று வீட்டிற்கு வந்திருந்தார். பேசி முடித்த பின் கோயில் வரை வந்து விட்டு விட்டு செல்லுமாறு கேட்டார். கோயிலுக்கு அருகில் செல்லும்போது ஒலிபெருக்கியில் ஒருவர் பேசிக் கொண்டிருந்தது கேட்டது. அப்போது தான் இன்று ஆகஸ்ட் 15 ஆகிற்றே அருணகிரிநாதர் திருவிழா நடக்கிறதே என்ற ஞாபகம் வந்தது. அருணகிரிநாதர் திருவிழா என்பது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15 அன்று மூன்று நாட்கள் வெகு விமரிசையாய் நடக்கும் ஒரு விழா. இரவு முழுவதும் சொற்பொழிவுகளும், சொற்போர், பட்டி மண்டபம் போன்றவை நடக்கும். கோயில் உட்புறம் மட்டுமில்லாது கோயில் வெளிப் புறத்திலும் கூட்டம் அலை மோதும். ஆனால் நேற்று என்னவோ கூட்டம் குறைவு தான்.

நான் கடையில் வேலை செய்துக் கொண்டிருந்தவன் அப்படியே கிளம்பி போனதால் (லுங்கியுடன்), என்னால் உள்ளே சென்று அமர முடியவில்லை. அதோடில்லாமல் ஒரு லேப்டாப்பை பிரித்து போட்டுவிட்டு வந்தேன். எங்கே யாராவது கஸ்டமர் வந்து அதை கலைத்து விடுவார்களோ என்ற பயம் மனத்தை அரித்துக் கொண்டிருந்ததால் என்னால் அங்கே நிற்கக் கூட முடியவில்லை. அண்ணனை விட்டு விட்டு கிளம்பும் போது ஒருவர் ஒலிபெருக்கியில் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. எதோ ஒரு பழந்தமிழ் பாட்டை விளக்கிக் கொண்டிருந்தார். அந்த பாடலையோ பேசிக் கொண்டிருந்தவர் பேரோ எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் சொன்ன ஒரு வரி என் முதுகுத் தண்டை சில்லிட வைத்தது.

"பார்ப்பதில் பார்ப்பதை பார்ப்பது அல்ல அறிவு. பார்ப்பதில் பார்க்காததை பார்ப்பது தான் அறிவு".


அறிவு என்பதைப் பற்றி இதை விட அற்புதமான விளக்கத்தை யாரும் சொல்ல முடியாது. கடைக்கு வந்த பின் எல்லா வேலைகளும் முடித்த பின் அந்த வரி என் மனதினுள் ஓடிக கொண்டே இருந்தது. நாம் முன்பே அறிந்த பல விஷயங்களை இந்த ஒரு வரி போதும் விளக்க.

சுய முன்னேற்ற புத்தகங்களில் பாதியளவு தண்ணீர் நிரப்பப்பட்ட கிளாஸ் பற்றி எல்லோரும் சொல்லுவார்கள். மீதி பாதியில் தண்ணீர் இல்லை என்பவரை விட பாதி தண்ணீர் பாதி காற்று உள்ளது என்று பார்ப்பவன் தான் தன்னிம்பிக்கை அதிகம் உடையவன் என்று. பார்க்காத காற்றை பார்த்தவன் தான் அறிவுள்ளவன்.

மேலாண்மை புத்தகங்களில் சொல்லுவார்கள். இல்லாத ஒரு பழக்கத்தை மக்களிடையே ஏற்ப்படுத்தி அவர்களுக்கு ஒரு பொருளை விற்பது தான் சிறந்த விற்பனை. நம் நாடுகளில் காபியும், அழகு சாதன பொருட்களும் விற்கபடுவது இந்த அறிவை வைத்து தான். நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு கதை ஆப்பிரிக்காவில் செருப்பு விற்கலாமா என்று ஆராய அனுப்பி வைத்த இருவரின் முடிவுகள். யாருமே செருப்பு இங்கு போடுவதில்லை எனவே இங்கு செருப்பு விற்கவே முடியாது என்று சொன்னவர். பார்த்ததை மட்டும் பார்த்தவர். இங்கு இதுவரை யாருமே செருப்பு பற்றி அறிந்திருக்கவில்லை எந்த செருப்பு கம்பனியும் இங்கு இல்லை. எனவே இது தான் சிறந்த இடம் என்று பார்க்காததை பார்த்தவர் தான் அறிவானவர்.

பக்தி மார்க்கத்திலும் அப்படித் தான். பார்க்கும் கல்லை மட்டும் நீங்கள் பார்த்தால் அது கல் தான். பார்க்காத கடவுளை நீங்கள் பார்த்தால் தான் அது கடவுள்.

சென்ட்ரல் பாலிடெக்னிக்கில் System analysis and design (SAD) பற்றி பாடம் எடுக்க குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்த போது ஒரு புத்தகத்தில் ஒரு நல்ல ப்ரோக்ராம்மர் (Programmer) என்பவர் யார் என்பதை பற்றி விளக்கி இருந்தார்கள். பிரச்சினையை முழுமையாக புரிந்துக் கொண்டவர், அப்பிரட்சினைக்கு பலதரப்பட்ட தீர்வுகளை வைத்திருப்பவர், அந்த தீர்வுகளில் எந்த தீர்வு செயல்படுத்த முடிந்தது என்று தேர்ந்தெடுக்கும் தன்மை உடையவர் மட்டுமில்லாது, அந்த ப்ரோக்ராம்மை நடைமுறைப் படுத்தும் போது எப்படியெல்லாம் பிற்காலத்தில் பிரச்சனைகள் வரலாம் என்பதும் அதற்கான தீர்வை இப்போதே இணைப்பதும் ஆன அறிவைக் கொண்டவர் தான் சிறந்த ப்ரோக்ராம்மர். இந்த கடைசி வரி எனக்கு மிகவும் பிடித்தது. நான் இப்போதும் ஒரு ப்ரோக்ராம்மை படித்தால் அதில் உள்ள குறைகள் தான் எனக்கு முதலில் தெரியும் (தப்புக் கண்டுபிடிப்பதில்லேயே குறியா இருக்காம்பா. வாத்தியார் பிள்ளைன்னு நிரூபிக்கிறான் பார். என்று ஓட்டுவார்கள்). சில சமயங்களில் ஒரு ஏடாகூடமான நிலையை கூறி விட்டு இந்த நிலையில் இந்த ப்ரோக்ராம் இயங்காது என்று கூறுவேன் அதற்கு அப்படி ஒரு நிலை எல்லாம் வராது என்று என் சக ப்ரோக்ராம்மர்கள் சொல்லி என் கருத்தை மறுப்பார்கள். ஆனால் பின்னாளில் அதே நிலையில் அந்த ப்ரோக்ராம் இயங்காமல் போயிருக்கிறது. (இவன் வாயை வெச்சான். அதனால் தான் இப்படி ஆகிட்டது என்று கடைசியில் என் பேரில் தான் பழி வரும்). இது போல் முன்னாள் ப்ரோக்ராம்மர் யோசித்திருந்தால் Y2K பிரச்சினை வந்திருக்காது.
ஆனால் இன்று அறிவுக்கு, மேல் நாடுகளில் குழப்பமான மிக நீண்ட விளக்கங்களை மாறி மாறிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது பல நூறு வருடங்களுக்கு முன்பே அதை சுருக்கமாகவும் சரியாகவும் சொன்ன நம் முன்னோர்களுக்கு நிச்சயமாய் நாம் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
இப்பொழுது கூட ஏதாவது டிக்சனரி எடுத்து பாருங்கள். அறிவு என்பது அவர்களை பொறுத்த வரை அனுபவத்திலும், படிப்பதாலும் கிடைப்பது தான் அறிவு என்றிருக்கும். அப்படியானால் புது புது விஷயங்களை கண்டுபிடிப்பவர்கள் அறிவில்லாதவர்களா?


அறிவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறிவு (Knowledge) என்பது உணர்தலாலும்அனுபத்தாலும்கற்பதாலும் கிடைக்கப்பெறுவைகளாகும். அறிவு என்பது ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை கிடைப்பவைகளாகவே உள்ளன.


OXFORD Dictionary

Definition of knowledge

noun

[mass noun]
·                     1facts, information, and skills acquired through experience or education; the theoretical or practical understanding of a subject:


Merriam Webster


 Definition of KNOWLEDGE

the fact or condition of knowing something with familiarity gained through experience or association (2) :acquaintance with or understanding of a science, art, or technique

எனக்கு இந்த விரிவுரைகளைக் படித்த பின் எழுந்த கேள்வி இது.
Then what is the difference between knowledge and “data processing and information processing”. If two are same whether our computers have the knowledge?